உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! மகிழ்ச்சியில் ராகுல்காந்தி!

Photo of author

By Sakthi

சென்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், ராகுல் காந்தி வெற்றி பெற்றதற்கு எதிராக சரிதா நாயர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கின்றது.

கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், வயநாடு, எர்ணாகுளம் ஆகிய ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

சரிதாநாயர் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிறைக்கு சென்று வந்த காரணத்தால், அவர் மக்களவை தேர்தலில் இரு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் வேட்புமனுவின் பரிசீலனையின் பொழுது அவரது இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

தன்னுடைய இரண்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டதை எதிர்க்கும் விதமாகவும், வயநாடு தொகுதியில் வெற்றிபெற்ற ராகுல்காந்தியின் வெற்றிக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் விதமாகவும், சரிதாநாயர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

தேர்தல் தொடர்பான புகார் மனுக்களை தேர்தல் புகார் மனுவாக தான் தெரிவிக்க வேண்டும், என கூறிய கேரள உயர்நீதிமன்றம் சரிதாநாயரின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து கேரளா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் சரிதாநாயர் மனு தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நீதிபதிகள், இராமசுப்பிரமணியன், ஏ.எஸ் போபண்ணா, ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

இந்த மனு தொடர்பான விசாரணையில், இருமுறை காணொளி காட்சி மூலமாக பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் யாரும் வராத காரணத்தால், வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிரான சரிதாநாயரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.