தமிழக காங்கிரசுக்கு ராகுல்காந்தி போட்ட அதிரடி உத்தரவு!

0
161

கூட்டணியில் இணைந்து இருக்கின்றது சட்டமன்றத் தேர்தலில் சீட்டுக்காக பேரம் பேச மாட்டோம் என்றும் ஸ்டாலினை முதல்வராக்க பாடுபடுவோம் என தமிழக காங்கிரஸ் கட்சி தெளிவாகத் தெரிவித்து விட்டது.

இந்த நிலையிலேயே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் நேற்றைய தினம் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தி இருக்கின்றார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே. சி வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மூத்த தலைவர் ப.சிதம்பரம், ஈவிகேஎஸ். இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றார்கள். இந்த ஆலோசனை முழுக்க முழுக்க தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது எவ்வாறு என்ற ஆலோசனையாக இருந்திருக்கின்றது. தேர்தலில் வெற்றி பெறுவது, வெற்றி வாய்ப்பு இருக்கின்ற தொகுதிகளைப் பற்றி நிர்வாகிகள் தெரிவித்த ஆலோசனையை கவனமாக கேட்டுக் கொண்டார் ராகுல் காந்தி.

அதன்பின்பு பேசிய ராகுல் காந்தி தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லாவிட்டாலும் வலிமையான கட்சியாக இருக்கிறோம் கடுமையாக உழைப்பது மட்டுமே கட்சியை மேலும் வலுப்பெறச் செய்யும். பாஜகவின் தவறான கொள்கையை மக்கள் மத்தியில் இன்னும் தீவிரமாக கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிமுகவின் அரசால் பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவாக விடிவு ஏற்படும். தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இந்த வெற்றியை எளிதாக்குவதற்கு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் மிகக்கடுமையாக வைத்திட வேண்டும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமானது அனைவரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கட்சியின் மேலிடம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்தார்.

பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து காங்கிரஸின் அடித்தளத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மூத்த தலைவர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்திருக்கின்றன. ஆகவே ராகுல் காந்தியின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகின்றது.

Previous articleIndian Air Force இருக்கும் ஏகபட்ட காலி பணியிடங்கள்!
Next articleதொடங்கியது போராட்டம்! ஸ்தம்பித்தது சென்னை!