நெகிழ்ச்சியில் ராகுல் டிராவிட் மிரண்டு போன இலங்கை அணி! சிங்கமாக சீரிய தீபக் சஹர்!

Photo of author

By Sakthi

இலங்கை தொடரை வெல்வதற்கு அடித்தளமாக அமைந்த தீபக் சாகரின் ஆட்டத்தைப் பார்த்து தன்னை அறியாமல் எழுந்து நின்று கைதட்டிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த சமயத்திலும் தீபக் சாகரின் சிறப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது.

இலங்கை அணி நிர்ணயம் செய்த 276 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் புகுந்த இந்திய அணியில் ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தவான் 29 ரணங்களுக்கும் வெளியேறிய அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய இஷன் கிஷன் 1 மனிஷ் பாண்டே 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்களை விளாசி வெளியேறினார். அவருடைய விக்கெட் விழுந்த பின்னர் இந்திய அணி தோற்பது உறுதி என்ற நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் ரசிகர்கள் எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர். முன்வரிசை பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க இயலாமல் திணறிய சூழ்நிலையில், தீபக் சஹர் இலங்கை பந்துவீச்சை மிகவும் நேர்த்தியாக எதிர்கொண்டார். நிதானமாக ரன்களை எடுத்த அவர் 82 பந்துகளை எதிர்கொண்டு 69 ரன்களை எடுத்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தான் விளையாடிய முதல் ஆட்டத்திலேயே அரைசதம் அடித்து அவர் அசத்தி இருக்கின்றார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த புவனேஸ்வர் குமார் 19 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டிப் பிடித்தது. அதோடு 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.

ஒரு பந்து வீச்சாளர் இவ்வளவு சிறப்பாக விளையாடுவாரா என்று மைதானத்தில் இருந்த இலங்கை அணியின் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பயிற்சியாளர்கள் என்று எல்லோரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார்கள். இதில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்திருக்கிறது அதாவது இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தன்னை அறியாமலேயே எழுந்து நின்று நெகிழ்ச்சியில் கைதட்டி இருக்கின்றார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் டிராவிட்டின் பயிற்சியில் வளர்ந்தவர் தான் தீபக் சாகர், தன்னுடைய பயிற்சி வீண்போகவில்லை என்று அவர் நெகிழ்ச்சியுடன் என்ற காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது..