எனது தந்தையின் கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைத்தன! ராகுல்காந்தி ட்வீட்!

Photo of author

By Sakthi

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வந்தார்கள்.

இந்தநிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு பேரறிவாளன் குற்றம் நிரூபிக்கப்படாமல் 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் எதற்காக சிறையில் இருக்க வேண்டும்? என்று தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

முன்னதாக தமிழக சட்டசபையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

ஆனால் அதன் மீது எந்த ஒரு முடிவையும் மேற்கொள்ளாமல் ஆளுநர் காலதாமதம் செய்து வந்தார். இதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்தது.

இந்த நிலையில், சமீபத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவுற்று தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. ஆகவே 2 நாட்களுக்கு முன்னர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும் கண்டனம் தெரிவித்ததோடு பேரறிவாளனை இந்த வழக்கில் இருந்து நிரந்தரமாக விடுதலை செய்தது.

இந்த சூழ்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனக்கும் பிரியங்காகாந்திக்கும் மன்னிக்க கற்றுக் கொடுத்ததாக அவருடைய மகனும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தன்னுடைய வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி தொடர்பான வீடியோ ஒன்றை பதிவிட்டார் ராகுல்காந்தி சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதாவது என்னுடைய தந்தை தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைத்தனர், அவர் கருணைமிக்க மனிதர் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் எனக்கும், பிரியங்காவுக்கும், மன்னிப்பு மற்றும் மற்றவர் உணர்வுகளை புரிந்து கொள்வதன் மதிப்பை அவர் தான் கற்றுக் கொடுத்தார் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் நாங்கள் ஒன்றாக செலவழித்த நேரங்களை அன்புடன் நினைவு கொள்கிறேன் என்று ராகுல்காந்தி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.