TVK CONGRESS: கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக பாஜக விஜய்க்கு நேரடியாகவும், காங்கிரஸ் மறைமுகமாகவும் ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற முடிவு இன்னும் வெளியாகாத காரணத்தினால், விஜய்யை பகடை காயாக திமுக கூட்டணிகள் பயன்படுத்தி வருகின்றன. திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் இதனை வெளிப்படையாக செய்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.எஸ் அழகிரி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் போன்ற பலரும், ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என திமுக தலைமையை வலியுறுத்தி வருவது சமீப காலமாக அரங்கேறி வருகிறது. விஜய்க்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கும் நல்ல நட்புறவு இருப்பதால் அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் தராவிட்டால் விஜய்யுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று திமுக தலைமையிடம் கூறியதாக தகவல் வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியிலிருந்து விலகும் எண்ணம் துளியும் இல்லை, நம்மை பயன்படுத்தி அதிக தொகுதிகளை பெற பார்க்கிறார்கள் என்பதை அறிந்த விஜய், காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சு வார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார் என்று சொல்லப்படுகிறது. காங்கிரஸ்- விஜய் கூட்டணி உறுதியாகும் என்று கூறப்பட்ட நிலையில், விஜய்யின் இந்த முடிவு காங்கிரஸுக்கு பேரிடியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து விஜய் பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்குவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

