முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு!! அமலாக்கத்துறையின் அடுத்த ஸ்கெட்ச் இவங்களுக்கு தான் !!

Photo of author

By Sakthi

அதிமுகவின்  முன்னாள் அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.
இவர் தற்போது தஞ்சாவூர் மாவட்டம்  ஒரத்தநாடு தொகுதி   MLA-வாக இருக்கிறார். ஓபிஎஸ் தலைமையில் நடத்தப்பட்டு வரும், அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவில் பயணித்து வருகிறார். இதற்கு முன்பாக 2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியதாக அறப்போர் இயக்கம் சார்பாக, அமலாக்க துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையின் முடிவில் பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ ராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் அடுக்குமாடி கட்டிடத்தின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பான கோப்புகள் 2013 ஆண்டு முதல் 2016 ஆண்டு வரை நிலுவைப்படுத்தி, 2016 ஆம் ஆண்டு ஸ்ரீ ராம் பிராபர்டீஸ் நிறுவனத்திடம் 27 கோடியே 90 லட்சம் லஞ்சம் வாங்கிய பின் அமைச்சர் ஒப்புதல் வழங்கியது.

லஞ்ச ஒழிப்பு துறையால் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்  வைத்திலிங்கம், அவரது இரண்டு மகன்கள் பிரபு மற்றும் சண்முகம் உள்பட 11 நபர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் லஞ்சம் ஒழிப்பு துறையினர் கடந்த மாதம் வழக்கு செய்தது. மேலும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு  சொந்தமான இடங்களில்  அமலாக்கத்துறையினரால்  சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தையான்குடிகாடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் 11  கொன்ட அதிகாரிகள் குழு இன்று சோதனை நடத்தி வருகிறது.