இரயில்வே துறைக்கு எந்த வித அறிவிப்பு இல்லை! சரிந்த பங்குகள்! அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
இன்று(ஜூலை23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இரயில்வே துறைக்கு எந்தவித ஒதுக்கீடும் செய்யப்படாததால் உயர்ந்து வந்த இரயில்வே துறையின் பங்குகள் சரியத் தொடங்கியுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று(ஜூலை23) 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட்டில் பலவிதமான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது. கல்வி கடன், சிறு குறு தொழிலாளர்களுக்கு கடன், ஏழைகளுக்கு வீடு, வரி விதிப்பு போன்ற பலவிதமான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது.
இதையடுத்து கடந்த சில தினங்களாகவே இரயில்வே துறையின் பங்குகள் உயர்ந்து கொண்டே வந்தது. அதாவது இன்று(ஜூலை23) பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் இரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து இரயில்வே துறையின் பங்குளான IRCTC, IRFC, RVNL ஆகிய பங்குகள் உயர்ந்து கொண்டே வந்தது. இதையடுத்து தற்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் இரயில்வே துறை சம்பந்தமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இவ்வாறு இரயில்வே துறை சம்பந்தமாக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாததால் IRCTC, IRFC, RVNL ஆகிய இரயில்வே துறை நிறுவனங்களின் பங்குகள் 5 சதவீதம் வரை குறையத் தொடங்கியுள்ளது. இதனால் இந்த பங்குகளை வாங்கி வைத்திருந்த முதலீட்டாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.