மேலும் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அறிவிப்பு!

Photo of author

By Pavithra

மேலும் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:! சென்னை வானிலை மையத்தின் தற்போதைய அறிவிப்பு!

வங்ககடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் மேலும் தமிழகத்தின் நான்கு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.

காஞ்சிபுரம்,சென்னை, திருவண்ணாமலை,விழுப்புரம் புதுக்கோட்டை, திருவாரூர், தேனி,உதகை,கொடைக்கானல் தர்மபுரி,சேலம்,நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வரும் நிலையில்,
தஞ்சை,கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தற்போது எச்சரித்துள்ளது.