தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் மழை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!

Photo of author

By Pavithra

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் மழை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்!

ஆந்திரா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி,தர்மபுரி, திருவள்ளூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும்,
சேலம்,கோவை, நாமக்கல் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,நீலகிரி, விழுப்புரம்,காஞ்சிபுரம்,ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைகும்,வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.