தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!
ஆந்திரா கடற்கரை பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவிழந்து தற்போது ஆந்திரா தெலுங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சியாக மாறியுள்ளது.இதன் காரணமாக கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம், நாமக்கல்,கோவை,நீலகிரி, தேனி,திண்டுக்கல்,வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,திருப்பத்தூர், ஆகிய 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது மேலும் சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
கர்நாடகா,தென்கிழக்கு, தென்மேற்கு,வங்ககடல் அந்தமான், மன்னார்வளைகுடா, வடகிழக்கு வங்ககடல், பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.