நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்!

Photo of author

By Pavithra

நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்!

Pavithra

நவுல் புயலின் தாக்கம்! தமிழகத்திற்கு மழை எச்சரிக்கைவிடுத்த வானிலை மையம்!

தாய்லாந்து நாட்டில் உருவான நவுல் புயல்,இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி இந்திய கடற்பகுதியாான வங்க கடலுக்குள் நுழைகின்றது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஒரிசா மற்றும் மேற்கு வங்க பகுதியை நோக்கி நகரும்.

இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதிலும்,கோவா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் விடுத்துள்ளது.

இந்த புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் நீலகிரி கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில்
இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,தமிழக
வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை பொருத்தவரை சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள்,மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.