தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!

0
163

தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்,கிருஷ்ணகிரி,
தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திண்டுக்கல்,மதுரை,
சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை,கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Previous articleமுதல்வரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!!
Next articleஹெட்மயரின் அதிரடியால் வெற்றி பெற்ற அமேசான் வாரியர்ஸ் அணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here