தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு!

0
283

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம், ஈரோடு,கரூர்,நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை,சிவகங்கை, மதுரை,தேனி,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில்
கிருஷ்ணகிரி,தர்மபுரி,
நாமக்கல், சேலம்,ஈரோடு,கரூர், மற்றும் திருச்சி ஆகிய ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேலும் சென்னையை பொருத்தவரையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் பதிவாகுமென்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Previous articleரஜினியை சீண்டிப்பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனம்! அப்செட்டில் ரஜினி!
Next articleநாங்கள் ஒன்றும் இங்கிலாந்தை பார்த்து பயப்படவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here