தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

Photo of author

By Pavithra

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி,தர்மபுரி,சேலம், நீலகிரி,வேலூர்,திருவள்ளூர், ராணிப்பேட்டை,திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும்,
திருவண்ணாமலை,ஈரோடு, திருப்பூர்,கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,தேனி,திண்டுக்கல்,கரூர், திருச்சி,மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும்,கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால்,புதுச்சேரி பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொருத்தமட்டில் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.