தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தல்!

0
162

தமிழகத்தில் இந்த 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தல்!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் அடுத்த 24 மணி நேரத்தில்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம் நாமக்கல் ஈரோடு,கோவை,நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,
திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்,பெரம்பலூர் கடலூர்,கள்ளக்குறிச்சி,திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Previous articleஇரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! 
Next articleபாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here