தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்!!
தெற்கு ஆந்திரா வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்,ராணிப்பேட்டை,
திருவள்ளூர்,திருப்பத்தூர்,
நீலகிரி,வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,கடலூர்,
திருவண்ணாமலை,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.