முன்னேற்பாடுகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தல்:? தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

0
101

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தின் மேற்கு மலைத்தொடர் பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் உள்ளிட்ட மலையோர மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடப்பட்டது.தற்பொழுது நீலகிரி உள்ளிட்ட மலையோரம் மாவட்டங்களுக்கு மேலும் 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் நேற்று விடப்பட்ட ரெட் கலர் அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
கோவை ,தேனி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநிலங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு மிதமானது முதல் கனமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை எதிர்பார்க்கலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Previous articleஅதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுகிறதா ? காரணம் இதுதான் !
Next articleஅமெரிக்கர்கள் இறக்கும் அபாயம்