தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை
தென்மேற்குப் பருவக் காற்றின் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்றன கோவை நீலகிரி திருப்பூர் திண்டுக்கல் தேனி தென்காசி போன்ற மாவட்டங்கள் அதோடு கன்னியாகுமரி நெல்லை போன்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சொல்லப்படுகிறது.
வெப்பச்சலனம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்களில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற உள் மாவட்டங்கள் மற்றும் கோவை நீலகிரி தேனி சென்னை புதுச்சேரி போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல வரும் 21ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதிபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எனவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 29டிகிரி செல்சியஸ் எனவும் சொல்லப்படுகிறது.