தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை! வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்!

Photo of author

By Sakthi

தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை! வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்!

Sakthi

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் புறநகர்ப் பகுதிகள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. கனமழையின் காரணமாக, ஒரு சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தலைநகர் சென்னை, தண்டையார்பேட்டை அருகே மழை பெய்து கொண்டிருந்தபோது டிரான்ஸ்பார்மர் வெடித்ததன் காரணமாக, பரபரப்பு உண்டானது.

தமிழகப்பகுதிகளில் மேல் நிலவிவரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தலைநகர் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நேற்று மாநகரம் முழுவதும் வெப்பம் நிறைந்த சூழ்நிலையில், இரவு இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

நுங்கம்பாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, போன்ற பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையின் காரணமாக, மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதாக சொல்லப்படுகிறது.

சென்னையின் புறநகர் பகுதியான ஆலந்தூர், மீனம்பாக்கம், வண்டலூர், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.

பூவிருந்தவல்லி, திருவேற்காடு, போரூர், வேலப்பன்சாவடி, உள்ளிட்ட பகுதிகளில் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த கனமழையின் காரணமாக, பூவிருந்தவல்லி, மதுரவாயல், உள்ளிட்ட பகுதிகளிலும் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் உண்டானது.

தண்டையார்பேட்டை பகுதிக்குட்பட்ட வ. உ. சிதம்பரனார் நகர் திருவள்ளுவர் குடியிருப்பில் முதல் பிரதான சாலையில் இருக்கின்ற டிரான்ஸ்பார்மர் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதன்காரணமாக, பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

ஆகவே அந்தப்பகுதி மக்கள் பதட்டமடைய தொடங்கினர். உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் வழங்கி மின் இணைப்பை துண்டித்த பிறகு சப்தம் குறைந்து மின்கசிவு நின்றது.

சேலம் மாநகர பகுதிகளான கொண்டலாம்பட்டி புதிய பேருந்து நிலையம், அரிசிபாளையம், அஸ்தம்பட்டி அம்மாபேட்டை 5 ரோடு, சூரமங்கலம், போன்ற பல்வேறு இடங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.