தமிழகத்தில் சென்ற வாரம் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் அதிகரிக்கும் ஒரு சில பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது.
இந்த சூழ்நிலையில், தென் தமிழக கடற்கரையை ஒட்டிய மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்கக் கடலை ஒட்டி இருக்கக்கூடிய இலங்கை பகுதியிலும் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோன்று நாளைய தினம் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.