தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா. புவியரசன் தெரிவித்துள்ளார்.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார்.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருத்தணி ஆகிய 4 மாவட்டங்களில் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவாய்ப்புள்ளதால் அடுத்த 6 நாட்களுக்கு மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.