காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓர் ஒரு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அதோடு வரும் 25 மற்றும் 26 உள்ளிட்ட தேதிகளில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும், மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் முதல் 23 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்த நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்தது.
வங்க கடல் பகுதியில் நிலவே வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் நோக்கி நகர்ந்த நிலையில், படிப்படியாக வலு குறைந்தது.
நேற்று இரவு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியா உருமாறியது. ஆனாலும் சென்னையில் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு மழை பெய்தது.
இதனடிப்படையில் திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர் போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்தது.