இன்று முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு மழை குறையும்! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

0
187

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை 3 மாதங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக தீவிரமாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ,தர்மபுரி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், ஈரோடு, போன்ற மாவட்டங்களில் கடந்த 10 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்தது. அடுத்த சில தினங்களுக்கு மழையின் அளவு குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இன்று முதல் வரும் 11ஆம் தேதி வரையில் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல தலைநகர் சென்னையில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleகாங்கிரஸ் பேனர் காற்றில் தூக்கி வீசப்பட்ட காட்சி!..காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள்!!வாகன ஓட்டிகள் கடும் அவதி?
Next articleநீட் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி! குவியும் பாராட்டுகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here