தமிழகத்தில் இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்:? முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டுகோள்!

0
120

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மீதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகின்றது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

மேலும் தமிழகத்தில் திருவாரூர்,காஞ்சிபுரம், சென்னை,திருவண்ணாமலை, வேலூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையை பொருத்தமட்டில் புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும்,சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்கு வங்கம்,ஒடிசா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதியில் மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleமனதிற்கு நெருக்கமானவர்கள் இத்தகைய முடிவை எடுக்கும்போது நமக்கு அதிக பாதிப்பு ஏற்படும்
Next articleராணுவவீரரையே ஏமாற்றி சீட்டு பணம் பறித்த நபர்! ராணுவ உடையுடனே போலீசில் புகார்