பேரம் பேசிய ஓடிடி தளங்கள்! நைசாக நழுவிய ராஜமௌலி

Photo of author

By Sakthi

பாகுபலி என்ற ஒற்றை இத்திரைப்படத்தின் மூலமாக ஒட்டுமொத்த உலகத்தையும் தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் தான் ராஜமௌலி. இந்த திரைப்படத்தை அடுத்து இவருடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது இந்த வரிசையில் தற்சமயம் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற படம்தான் ஆர் ஆர் ஆர்.

ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கின்ற இந்த திரைப்படம் கடந்த பொங்கல் அன்று நாடு முழுவதும் வெளியாக இருந்தது. இருந்தாலும் நோய்த்தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற காரணத்தால், படக்குழுவினர் இந்த திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள். இதற்கிடையில் படத்தின் வெளியீடு தள்ளிக் சென்ற சமயத்தில் இந்த திரைப்படத்தை நேரடியாக இணையதளத்தில் வெளியிட பிரபல இணையதள நிறுவனம் ஒன்று இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதோடு இந்த திரைப்படத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய்க்கு மேல் கொடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள், இருந்தாலும் அவர்களுடைய இந்த வேண்டுகோளை மறுத்து இருக்கின்ற இயக்குனர் ராஜமவுலி இந்த திரைப்படம் நிச்சயமாக திரை அரங்குகளில் தான் வெளியாகும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் பாகுபலி அளவிற்கு மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கின்ற இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தால் தான் சிறப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.