உருப்படியாக தலைப்பாகை கூட கட்டத் தெரியாத ஒருவர் எப்படி முதல்வராக முடியும்…! அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கிண்டல்…!

Photo of author

By Sakthi

எதிர்க்கட்சித் தலைவர் ராசி இல்லாதவர் எனவும் அவர் முதல்வர் ஆகவே முடியாது எனவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்திருக்கின்றார்.

மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் அதிமுக தேர்தல் கமிட்டி உறுப்பினர்களுடைய ஆலோசனைக் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் யோக்கியமானவரும் அல்ல புத்திசாலியும் அல்ல அவருடைய தகப்பனார் கருணாநிதி வல்லவர்தான் ஆனாலும் நல்லவர் என்று சொல்வதற்கில்லை அவர் உயிருடன் இருந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முதல்வராக அமர்ந்து இருக்க வேண்டும் ஆனால் அப்போதே அவருக்கு அந்த வாய்ப்பானது கிடைக்கவில்லை வருங்காலத்திலும் அவரால் முதல்வர் நாற்காலியில் அமர முடியாது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு உண்மையான விவசாயி என்பதை நிரூபிக்கும் வகையில் பச்சை நிற துண்டால் தலைப்பாகை கட்டிக்கொண்டு விவசாயிகளுடன் இணைந்து இருக்கின்றார் ஆனால் எதிர்க்கட்சித் தலைவரால் அவரைப் போன்று அனைவரிடமும் சகஜமாக இருக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.