ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் பானிபூரி விற்றது இல்லை!! உண்மையை உடைத்த பயிற்சியாளர்!!

Photo of author

By Sakthi

ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் பானிபூரி விற்றது இல்லை!! உண்மையை உடைத்த பயிற்சியாளர்!!

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடி வரும் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் பானிபூரி விற்றது இல்லை என்று அவருடைய பயிற்சியாளர் தற்போது தெரிவித்துள்ளர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் ஜெய்ஸ்வால் 19 வயதுக்கு உட்பட்டோரின் இந்திய உலகக் கோப்பை தொடரில் இடம்பெற்று சிறப்பாக விளையாடினார். பிறகு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார்.

ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட போது ஜெய்ஸ்வால் பானி பூரி விற்று வந்தார். பிறகு ஐபிஎல் ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார். இவரது வளர்ச்சி பாராட்டத்தக்கது என்று ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் பற்றி அனைவரும் பேசினர். ஆனால் தற்போது ராஜஸ்தான் அணி வீரர் ஜெய்ஸ்வால் அவர்களுடைய பயிற்சியாளர் அந்த தகவல் எதுவும் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் குறித்து ஜெய்ஸ்வால் அவர்களுடைய பயிற்சியாளர் ஜுவாலா சிங் கூறுகையில் ராஜஸ்தான் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பானி பூரி விற்பவராக இருந்து கிரிக்கெட் வீரராக மாறினார் என்ற தகவல் உண்மை இல்லை. ஆசாத் மைதானத்தில் பயிற்சி நேரம் போக ஓய்வு நேரத்தில் அங்கு பானி பூரி விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் உதவி செய்வார்,அவ்வளவுதான். 2013ம் ஆண்டு அவருடைய தந்தை பயிற்சிக்காக ஜெய்ஸ்வாலை என்னிடம் சேர்த்து விட்டார். அப்போது இருந்து நான் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவருடன்தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.