அந்த விவகாரத்தில் யாரும் உணர்ச்சி வசப்படக் கூடாது! பொறுமையுடன் காத்திருங்கள் அண்ணாமலை அதிரடி பேட்டி!

0
159

தமிழகத்தின் வீரப் பெண்மணி வீர நாச்சியாரின் 292வது பிறந்தநாள் சிவகங்கையில் இருக்கின்ற மணிமண்டபத்தில் நேற்று நடந்தது, இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்தக் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வேலு நாச்சியார் போன்ற அற்புதமான தலைவர்களின் புகழை இந்தியா முழுவதும் கொண்டு செல்வதுதான் பாஜகவின் நோக்கம் என்று தெரிவித்தார், ராஜீவ் காந்தி கொலை குற்ற வழக்கில் 7 பேரின் விடுதலை விவகாரம் சட்டபூர்வமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இதில் யாரும் உணர்ச்சி வசப்படக் கூடாது என்று தெரிவித்தார்.

டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான காப்பீட்டுத் தொகை அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்திற்கான வெள்ள நிவாரண தொகை உரிய முறையில் கணக்கிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்பான கேள்விக்கு பதில் தெரிவித்த அவர், எங்களுடைய கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் அவர் மிக விரைவில் குற்றமற்றவர் என்று நிரூபித்து வருவார் அது வரையில் காத்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Previous articleதமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்! இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!
Next articleஅம்மா மினி கிளினிக்குகள் மூடல் ! திமுகவின் அதிகார ஆட்டம்!