ADMK DMK: 2021 தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக, 2026 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இதற்காக தனது பிரச்சார பயணத்தை ஒதுக்கி வைத்து விட்டு, நான்கரை ஆண்டுகளாக திமுக மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை அவர்களுக்கு நியாபகப்படுத்தும் நிகழ்ச்சியும், சென்ற தேர்தலில் தோல்வியுற்ற பகுதிகளில் இந்த முறை வெற்றி பெற அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்திருப்பது போன்ற பல்வேறு செயல்பாடுகளை கையிலெடுத்து செயல்படுத்தி வருகிறது.
மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திமுக தான் இதில் முதலிடம் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம். இதனை மிஞ்சும் வகையில் அதிமுகவும் இதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டது. அந்த வகையில், விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே. கணேஷ் பாண்டி அவருடைய ஆதரவாளர்கள் 200 பேருடன், அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
இவரின் இந்த சேர்க்கை விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிமுகவிலிருந்து முக்கிய முகங்கள் பிரிந்து வேறு கட்சியில் இணைந்து வருவதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் வேளையில், இவரின் இந்த இணைவு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும், தற்போதுள்ள அரசியல் சூழலில் அதிமுகவும், தவெகவும், திமுகவை கடுமையாக எதிர்த்து வருவதை ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.