டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தன்னுடைய கட்சி பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கின்றன நிலையிலே ரஜினிகாந்தை அவர் பின்னால் இருந்து பாரதிய ஜனதா கட்சிதான் இயக்குகின்றது என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையிலே தன்னுடைய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அர்ஜுன மூர்த்தியை ரஜினிகாந்த் நியமித்து இருப்பதன் மூலமாக ரஜினிகாந்த் அவர்களுக்கும், பாஜகவிற்கும் , இருக்கின்ற உறவு வெளிப்பட்டு இருப்பதாக பலர் நினைக்கின்றார்கள்.
ஆனாலும் ரஜினிகாந்த் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர மாட்டார் என தெரிவித்திருக்கின்றார் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெருக்கமான அரசியல்வாதியான கராத்தே தியாகராஜன் இன்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை கொண்டாடிய கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதை தெரிவித்தார்.
ரஜினிகாந்த் ஒரு சிலரை தன்னுடைய கட்சியில் சேர்த்துக் கொண்டார் என்ற காரணத்திற்காக, அவர் ஆர் எஸ் எஸ் வழியில் வந்தவர் என்று தெரிவித்துவிட இயலாது. அதன் காரணமாக ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என்று ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்தை பற்றி நான் தெரிந்து கொண்ட வரையில் அவர் அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பதை ஏற்றுக் கொள்ளமாட்டார், என்று எனக்கு தோன்றுகின்றது என்று தெரிவித்தார்.
பத்திரிக்கையாளர்கள் அவரிடம் பாரதிய ஜனதா முன்வைக்கும் ஆன்மீக அரசியலை தானே அவரும் முன்வைக்கின்றார் என்று கேள்வி கேட்டபோது, ரஜினி முன்வைக்கும் ஆன்மீக அரசியல் நேர்மையான அரசியல் ரஜினி இந்து அதன்காரணமாக பாஜக மற்றும் இந்துத்துவா இதை நீங்கள் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். திமுகவும் ,அதிமுகவும் தான் முதலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஒரு சமுதாய இயக்கம் என்று கருணாநிதி தெரிவித்தார். நான் தெரிந்து கொண்ட வகையில் எனக்கு கிடைத்த தகவலின் படி அவர் பாஜகவில் இணைய மாட்டார் என்று நினைக்கின்றேன்.
தமிழ்நாட்டில் எட்டாயிரம் மசூதிகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உலமாக்கள் சபை தலைவர்களை நடிகர் ரஜினிகாந்த் கடந்த மார்ச் மாதம் சந்தித்து பேசி இருக்கின்றார். அவருடைய ராகவேந்திரா திருமண மண்டபமே இஸ்லாமியர் இடம் இருந்து வாங்கப்பட்டது தான்.
ரஜினிகாந்த் அவர்களுக்கு நரேந்திரமோடி நண்பர் அதேபோல அமித்ஷாவும், நண்பர் காங்கிரஸ் கட்சியை சார்ந்த சிதம்பரமும் நண்பராக தான் இருக்கின்றார். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு என்று பல கட்சிகளிலும் அவருக்கு நண்பர்களாக இருந்து வருகிறார்கள். மலேசிய பிரதமர் கூட அவருக்கு நண்பராக இருந்தவர்தான் இருக்கிறவர்தான் ஆகவே நண்பர்கள் இருக்கின்றார்கள் என்பதை வைத்துக்கொண்டு ரஜினிகாந்த் மீது தேவையற்ற முத்திரையை குத்த இயலாது என்று அவர் தெரிவித்தார்.