கூட்டணி கட்சிகள் எடுத்த அதிரடி முடிவால் அரசியல் அனாதையான திமுக!

Photo of author

By Sakthi

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களுக்கு குறைவான நாட்களே இருக்கின்ற நிலையில் திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒரு மெல்லிய உறவுதான் நீடித்து வருவதாக தெரிவிக்கிறார்கள் வெளியிலே ஏதோ எல்லாம் முடிந்து கூட்டணி நன்றாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கின்றது திமுக என்று சொல்கிறார்கள்.

பீகார் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகக்குறைவான இடங்களை கிடைத்திருக்கின்றது இதன் காரணமாக காங்கிரஸின் செல்வாக்கு நாடு முழுவதும் குறைந்திருப்பதாக பார்க்கப்படும் நிலையில் காங்கிரஸுக்கு எதற்காக அதிக இடங்களை கொடுக்கவேண்டும் என்று திமுக யோசிப்பதாக சொல்கிறார்கள் திமுகவின் இந்த மரியாதை குறைவான செயல்பாடானது காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

2019 ஆம் வருடம் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் சமீபத்தில் முடிந்த பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளை மேற்கோள்காட்டி மிகவும் குறைவான இடங்களில் திமுக காங்கிரசிற்கு ஒதுக்குவதற்கு திட்டமிட்டு இருக்கின்றது ஆட்சியில் பங்கு என்ற குரல் ஓங்கி ஒலித்து வந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பீகார் சட்டசபை தேர்தலை அடுத்து இப்போது திமுக எத்தனை சீட்டுகள் கொடுத்தாலும் அதனை சரி என்று சொல்லி வாங்குவதை தவிர வேறு வழி இல்லை கூட்டணியில் ஒட்டிக் கொண்டு இருக்கின்றது காங்கிரஸ் என்று சொல்கிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனக்கு மரியாதை கிடைக்காத காரணத்தால் அதிருப்தியில் இருந்து வருகின்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுடைய சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் திமுக அதனை நிராகரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன இது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எடுத்த நடவடிக்கைகளுக்கு திமுக எந்த ஒரு ஒத்துழைப்பும் கொடுக்காதது இதற்கு சான்றாக இருக்கிறது இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க மதிமுகவும் இடதுசாரி கட்சிகளும் கூட்டணியில் தான் இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கின்றது.

அதோடு திமுகவிற்கு வேலை செய்யும் பிரசாந்த் கிஷோர் அவர்களின் ஐபேக் டீம் திமுக 200 இடங்களில் போட்டியிட வேண்டும் என தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் மிகப்பெரிய அதிருப்தியில் தான் இருக்கின்றன திமுகவுடைய இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் மூன்றாவது அணி அமைப்பது மற்றும் ரஜினி கமலுடன் இணைவது குறித்த ஆலோசனையில் கூட ஈடுபட்டு வருகிறார்கள் கூட்டணி குழப்பங்கள் ஒருபுறம் இருக்க திமுக தோழமையை மறந்துவிட்டு அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சர்வாதிகார போக்கை கடைப்பிடித்து வருகின்றது இதில் எத்தனை கட்சிகள் தேர்தல் வரை கூட்டணியில் இருக்கும் என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.