நோய் தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்ட ரஜினிகாந்த்!

Photo of author

By Sakthi

நோய் தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்ட ரஜினிகாந்த்!

Sakthi

கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் சீன நாட்டின் வூகான் மாகாணத்தில் இந்த நோய் தொற்று வைரஸ் உருவெடுத்தது அதன்பிறகு பல நாடுகளிலும் இந்த வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி விடுகின்றது இந்தியாவில் நோய் தொற்று வைரஸ் தொற்றின் காரணமாக, சென்ற மார்ச் மாதம் 2020 ஆம் வருடம் முதல் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் பிறகு இந்த நோய்த்தொற்றின் தாக்கம் சிறிது சிறிதாக குறைய குறைய ஊரடங்கு தளர்வுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் தற்சமயம் இந்த நோய் தொடரின் இரண்டாவது அலை நம்முடைய நாட்டை உலுக்கி வருகின்றது. இதன் காரணமாக, பல்வேறு நபர்களும் உயிருக்காகப் போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நாட்கள் செல்ல செல்ல உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகிறது.

அதோடு இந்த நோயினால் இறப்பிற்கு உள்ளன சடலத்தை எரிக்கவோ அல்லது மருத்துவமனையில் வைப்பதற்கு இடம் கிடைக்காமல் மக்கள் நாள்தோறும் அல்லாடி வருகிறார்கள். இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல பிரபலங்களும் தடுப்பூசி தெரிவித்துக் கொள்வது, விதி முறைகளை கடைப்பிடிப்பது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தடுப்பூசி இரண்டாவது தவணையைப் செலுத்திக் கொண்டார் என்றும் செலுத்துவதற்காக பணியாளர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்ற தகவல் கிடைக்கிறது. இதனை அடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வருவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.