நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார்.
ரஜினிகாந்த் தன்னுடைய 70ஆவது பிறந்தநாள் விழாவை இன்று கொண்டாடி வருகின்றார் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்ற நிலையில், அவருடைய பிறந்த நாளும் வந்திருக்கும் காரணத்தால், அவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் இந்த பிறந்த நாளை அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆழமாக கொண்டாடுவதற்கு முடிவு செய்திருக்கிறார்கள்.
அன்னதானம், கோவிலில் பூஜை, நலத்திட்ட உதவிகள், போன்ற பலவற்றை அவருடைய ரசிகர்கள் திட்டமிட்டு வைத்திருக்கிறார்களாம். அதேபோல ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்கள் நள்ளிரவு 12 மணியளவில் போயஸ் தோட்டத்தில் இருக்கின்ற அவருடைய வீட்டின் முன்பு கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என்று கோஷமிட்டு உற்சாகமாக பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.
செய்தியாளர்களிடம் பேசிய ரசிகர்கள் தேர்தலில் ரஜினி தான் ஆட்சிக்கு வருவார் மக்களுக்கு நல்லது செய்வார் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
நேற்று இரவே தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய வலைதள பக்கத்தின் மூலமாக ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றார். தன்னுடைய ஓய்வில்லாத உழைப்பாலும் திறமையாலும் தமிழ் திரையுலகில் ஒரு தனி முத்திரையைப் பதித்து சூப்பர் ஸ்டாராக வலம் வரும் அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்னுடைய இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்திருக்கின்றார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்.
ரஜினிகாந்த அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் வலைதளப் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். இதன்காரணமாக டிவிட்டரில் ஹாப்பி பர்த்டே ரஜினிகாந்த் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது.