கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ. கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு உடனடியாக சூர்யா நடிக்க துவங்கிய திரைப்படம் இது. பக்கா ஆக்ஷன் மற்றும் காதல் படமாக ரெட்ரோ உருவாகியுள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அந்தமானில் நடந்தது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அதோடு, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் சூர்யாவின் அப்பாவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்ற கன்னிமா பாடல் லிரிக் வீடீயோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
சந்தோஷ நாராயனணே இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இப்பாடலை புரமோஷன் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்பாடலுக்கு பலரும் நடனமாடி வீடியோ வெளியிட்டார்கள். இந்த படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. வருகிற 18ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரஜினிக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கியவர். எனவே, அவருக்காகவும், சூர்யாவுக்காகவும் ரஜினி இந்த விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
ஒருபக்கம், ரெட்ரோ படத்தில் 3வது பாடலை இன்று படக்குழு வெளியிட்டிருக்கிறது. தி ஒன் என்கிற தலைப்போடு இந்த பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சந்தோஷ் நாராயணனும், சித் ஸ்ரீராமும் இப்பாடலை இணைந்து பாடியிருக்கிறார்கள்.