பிக்பாஸ்க்கு பிறகு ராஜு பிரியங்கா ஒன்றாக இணைந்து செய்யவிருக்கும் முக்கிய விஷயம்! பட்டைய கிளப்பணும் பாண்டியா!

Photo of author

By Sakthi

பிக்பாஸ்க்கு பிறகு ராஜு பிரியங்கா ஒன்றாக இணைந்து செய்யவிருக்கும் முக்கிய விஷயம்! பட்டைய கிளப்பணும் பாண்டியா!

Sakthi

விஜய் டிவியின் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் எல்லோராலும் கொண்டாடப்பட்டது ராஜு ஜெயமோகன் அவருக்கு மக்களும் அதிக ஓட்டுகள் போட அவரே இந்த சீசனில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நிகழ்ச்சி முடிவடைந்து ராஜீவ் தன்னுடைய குருவான பாக்யராஜ், இயக்குனர் நெல்சன் உள்ளிட்டவர்களை விருதுடன் சென்று சந்தித்தார். அதன் பிறகு தனக்கு மிகவும் பிடித்தமானவர்களையும் ராஜு சந்தித்த வண்ணம் இருக்கிறார்.

சமீபத்தில் ராஜு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் வெளியாகியிருந்தது. தற்சமயம் என்ன தகவல் என்று கேட்டால் ராஜு மற்றும் பிரியங்கா உள்ளிட்ட இருவரும் ஒன்றாக இணைந்து நடனமாட உள்ளார்களாம். பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது, நடனப் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.