
PMK: பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே 8 மாதங்களுக்கு முன்பு மோதல் தொடங்கிய நிலையில், அது இன்னும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. ராமதாஸின் எந்த முடிவையும் ஏற்காத அன்புமணியை ராமதாஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள போவதாக கூறிய ராமதாஸ் தரப்பு, அன்புமணி மீது கட்சியின் முகவரியை மாற்றியதாகவும் புகார் அளித்திருந்தது.
இதனை தொடர்ந்து பாமக இரண்டு பிரிவாக பிரிந்திருந்தது. பாமக நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் யார் பக்கம் செல்வதென்று தெரியாமல் திணறி வந்தனர். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த மருத்துவர் ஐயாவுக்கு ஏதாவது நடந்தால் அவருடன் இருப்பவர்களை சும்மா விட மாட்டேன் என்று அன்புமணி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த ராமதாஸ் படிக்காத மாடு பையன் கூட இப்படி பேச மாட்டான் என்று கடுமையாக தனது வாதத்தை முன் வைத்திருந்தார். இதன் பிறகு பாமக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. ராமதாஸ் சமீப காலமாக திமுகவிற்கு சாதகமாக பேசி வருவதால் அவர் திமுக உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்றும், அன்புமணி அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்றும் சொல்லப்பட்டது.
இந்த கூட்டணி கிட்ட தட்ட உறுதியான சமயத்தில், ராமதாஸ் அன்புமணியிடம் ஒரு டிலிங்கை செய்திருக்கிறாராம். அது என்னவென்றால், யார் அமைத்திருக்கும் கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுகிறதோ அவருக்கு தான் பாமக சொந்தம் என்பதாகும். அதாவது அதிமுக வென்றால் அன்புமணிக்கு கட்சி சொந்தம், அதுவே திமுக வென்றால் ராமதாசுக்கு கட்சி சொந்தம். தோற்றவர்கள் கட்சியின் அனைத்து பதவிகளிலிருக்கும் தானாக விலக வேண்டுமென்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு அன்புமணி என்ன பதில் கூறுவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
