ஆறு வருடங்கள் ஆயிடுச்சு இன்னும் ரிசல்ட் வரல !! TNPSC-யை கண்டித்த ராமதாஸ்!!

Photo of author

By Sakthi

TNPSC:ஆறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற தேர்வின் முடிவுகளை TNPSC-வெளியிட வலியுறுத்தினார் பாமக ,நிறுவனர் ராமதாஸ்.

2018 ஆம் ஆண்டு TNPSC தேர்வாணையத்தால் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. 110 காலிப்பணியிடங்களை அறிவித்து இருந்தது. ஆனால் ஆறு ஆண்டுகள் ஆகியும் அத் தேர்வு முடிவுகள் என்னும் TNPSC வெளியிடவில்லை. இதனால் தேர்வு எழுதியவர்கள் பல வழக்குகள்உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்கள். மேலும் இப் பதவிகளை நிரப்புவதில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 190 காலிப்பணியிடங்கள் உள்ளது இதில் 4 பதவிகள் மட்டும் நிரப்பப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது 45 மோட்டார் வாகன ஆய்வாளர் காலி பணிக்கான தேர்வை அறிவித்து இருக்கிறது TNPSC தேர்வாணையம். எனவே செய்தியாளர் சந்திப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான தேர்வு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்றது. பொதுவாக TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வு முடிவுகள் தேர்வு நடந்த 2 மாதங்களுக்கு பின் வெளியிடப்படும். ஆனால் 110 மோட்டார் வாகன ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு முடிவுகள் இன்னும் வரவில்லை.

எனவே அதற்கான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதைக் குறிப்பிட்டு விரைவில் ரிசல்ட் TNPSC வெளியிட வலியுறுத்தினார் பாமக ,நிறுவனர் ராமதாஸ். தமிழகத்தில் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி இருக்கிறார்கள் இந்த நிலையில் எழுதிய தேர்வின் முடிவுகளை TNPSC  வெளியிடாமல் இருப்பது என்பது  வருத்தத்தை கொடுக்கிறது.