இந்தியாவில் நோய்த்தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது ஆனால் உலகின் பல நாடுகளில் குறைந்து இருந்த நோய்த்தொற்று இப்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது அதிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகின்றது அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் இரண்டு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டு இருக்கின்றது.
அதேபோல இங்கிலாந்து பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் இந்த தொற்றின் இரண்டாவது அலை அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது
இந்த நிலையில் குளிர்காலத்தில் இந்த தொடரின் வேகம் அதிகரிக்கும் என்ற காரணத்தால் இந்தியாவில் இரண்டாவது சம்பந்தமாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் அதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும் பொதுமக்களுக்கு தன்னுடைய வலைதள பக்கம் மூலமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
அதில், “உலக அளவில் கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 6.57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் மட்டும் 3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவை இரண்டாவது அலை தாக்கும் ஆபத்து அதிகம். எனவே தமிழகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.