DMK PMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும் நிலையில், மக்கள் சந்திப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு போன்ற நடவடிக்கைகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இவர்கள் இருவரும் இரு வேறு திசையில் பயணித்து வருவதால் பாமகவின் வாக்கு வங்கி சிதற கூடும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது அன்புமணி திமுகவை கடுமையாக எதிர்த்து வருவதால் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்ட சமயத்தில், பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் அன்புமணியை நேரில் சந்தித்து அதனை உறுதி செய்தார்.
ஆனால் ராமதாஸ் இன்னும் அவருடைய நிலைப்பாட்டை உறுதி செய்யவில்லை. எனினும் அன்புமணி அதிமுக உடன் நெருக்கம் கட்டி வருவதால் ராமதாஸ் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்ற கருத்தும் நிலவியது. மேலும் ராமதாஸ் திமுகவிற்கு சாதகமாக நிறைய விஷயங்கள் செய்வதும், அவர்களுக்கு ஆதரவாக பேசுவது போன்ற பல செயல்பாடுகளில் ஈடுபட்டார். இவையெல்லாம் அவர் திமுகவில் இணைவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் அவருடைய வாதம் அமைந்துள்ளது.
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக உடனான கூட்டணி குறித்து கேட்ட போது, திமுக உடனான கூட்டணி என்பது போக போகத்தான் தெரியும் என்று கூறி முடித்தார். இந்த பதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. திமுக உடன் கூட்டணி இல்லையென்றால் அதனை ஓபனாக சொல்லி இருக்கலாமே. போக போக தான் தெரியும் என்பது கூட்டணிக்கான அடித்தளமாகவே பார்க்கப்படுகிறது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

