நடிகர் விஜய்யுடன் ரம்பா எடுத்த செல்பி புகைப்படம்! இணையத்தில் வைரல்!
நடிகை விஜய் மற்றும் நடிகை ரம்பா இருவரும் தற்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.
உழவன் என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை ரம்பா அதைத் தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, நினைத்தேன் வந்தாய், சுந்தரபுருஷன், சிவசக்தி, குங்குமப்பொட்டு கவுண்டர், ஆனந்தம், காதலா காதலா, மின்சாரக் கண்ணா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் மானட மயிலாட, ஜோடி நம்பர் ஒன் போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். 90ஸ் கிட்ஸ்ஸின் கனவு நாயகியாக இருந்த ரம்பா சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பொழுது சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்.
அதாவது 2010ம் ஆண்டு நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுடன் இணைந்து நடித்து மூன்று மொழிகளில் உருவான விடியும்வரை கத்தி என்ற திரைப்படம் வெளியாகும் என்று காத்திருந்த நிலையில் அந்த திரைப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் 2010ம் ஆண்டில் கனடா நாட்டை சேர்ந்த இலங்கை தமிழர் இந்திரகுமார் என்பவரை நடிகை ரம்பா அவர்கள் திருமணம் செய்து கொண்டார்.
கனடா நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆன நடிகை ரம்பா அவர்கள் தற்பொழுது ஒரு பதிவு ஒன்றை இட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதாவது நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விஜய் அவர்களை சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படங்களை தற்பொழுது நடிகை ரம்பா அவர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் நடிகை ரம்பா அவர்கள் நடிகர் விஜய் அவர்களுடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் குடும்பத்தினருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம், தன் குழந்தையை நடிகர் விஜய் அவர்கள் வைத்திருக்கும் புகைப்படம் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து நடிகை ரம்பா அவர்களின் பதிவில் “பல வருடங்களுக்கு பிறகு உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது விஜய். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று நடிகை ரம்பா குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ரம்பா மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்து மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை ரம்பா அவர்கள் நடிகர் விஜய் அவர்களுடன் இணைந்து சுக்ரன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.