ரன்பீருக்கு அனுஷ்கா மீது காதலா? வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Photo of author

By Sakthi

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தற்சமயம் அவர் திரைப்படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை. ஆனாலும் கூட அவருடைய மார்க்கெட் எந்த விதத்திலும் சரியவில்லை. தென்னிந்திய திரை உலகில் கொடி கட்டிப் பறந்த அனுஷ்கா பாலிவுட் பக்கம் செல்லவில்லை. கேட்டால் அவருக்கு அதில் விருப்பமில்லை என்றும் சொல்கிறார்கள். ஆனாலும் அனுஷ்காவிற்கு பல பாலிவுட் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும் ஒருவர் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 2017 ஆம் வருடத்தின் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர் ரன்பீர் கபூரிடம் அனுஷ்கா தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட சமயத்தில் அவர் பாகுபலி திரைப்படத்தை பார்த்த பின்னர் அனுஷ்கா மீது தனக்கு காதல் இருப்பதை ஒப்புக்கொண்டார். அதோடு அவருடன் ஒன்றிணைந்து நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இரண்டு பேரும் எப்போது ஒன்றிணைந்து நடிப்பார்கள் என்று இந்திய சினிமா துறை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

தற்சமயம் அனுஷ்காவின் அண்மைக்கால புகைப்படத்தில் அவர் உடல் எடை கூடி காணப்பட்டார். இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்காக அனுஷ்கா தன் உடல் எடையை அதிகப்படுத்தினார். இருந்தாலும் அதனை தற்போது வரையில் குறைக்க இயலாமல் அவதிப்படுவதாக சினிமா துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனுஷ்கா இப்போது நீங்கள் தெலுங்கு நடிகர் நவீன் போலீஸெட்டி உடன் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். 40 வயது பெண்ணை காதலிக்கும் இருபது வயது இளைஞன் என்ற விதத்தில் அந்த திரைப்படம் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.