மது போதையில் பெண்ணிடம் அத்துமீறல்!! போதை காவலர் கைது!!

Photo of author

By Jeevitha

மது போதையில் பெண்ணிடம் அத்துமீறல்!! போதை காவலர் கைது!!

Jeevitha

Raped a woman under the influence of alcohol!! Narcotics policeman arrested!!

Erode: ஈரோடு அருகே ஒரு பெண்ணிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு அத்து மீறிய காவலர் கைது.

காவலர்கள் தான் மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அதே காவல் துறை சேர்ந்த காவலர் பெண்ணிடம் தகராறு செய்தது அந்த பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் அத்தாணியை சேர்ந்தவர் தான் கார்த்தி. அவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் அந்தியூர் அருகே ஒரு பெண்ணிடம் குடிபோதையில் நடுரோட்டில் கட்டி பிடித்து, அவரை தகாத வார்த்தைகளில் பேசி உள்ளார். அந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இந்த செய்தியை அறிந்த காவல் துறை விரைந்து வந்து கார்த்தியை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்றார். ஆனால்  அப்போதும் அதை கண்டுகொள்ளாமல் அந்த பெண்ணிற்கு கார்த்தி என்ற காவலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அந்த சம்பவத்தை தடுக்க வந்த காவலர்களை தனது பணியை செய்ய விடாமல் தடுத்தார்.

இதனை பார்த்த மக்கள் காவல் துறையின் மேல் வைத்த நம்பிக்கையை இழந்து, மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய இவர்கள் இப்படி செய்தால் நாம் எங்கு  சென்று நமக்கான பிரச்சனைகளை கூறுவது என்று புலம்பி கொண்டிருந்தார்கள். இதையடுத்து காவலர்கள் மது போதையில் இருந்த கார்த்திக் என்னும் காவலரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவர் மீண்டும் காவலர்கள் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.