பயனில்லாமல் போன ரஷித் கானின் அதிரடியான ஆட்டம்!! குஜராத் அணி தோல்வி!!

Photo of author

By Sakthi

பயனில்லாமல் போன ரஷித் கானின் அதிரடியான ஆட்டம்!! குஜராத் அணி தோல்வி!!
நேற்று நடந்த  மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான ஆட்டததை ரஷித் கான் வெளிப்படுத்தியும் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியடைந்தது.
நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபில் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கிய தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் 37 ரன்களிலும், ரோஹித் சர்மா 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சூரியக்குமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதமடித்தார். 49 பந்துகளில் அதிரடியாக விளையாடி 103 ரன்கள் குவித்தார் சூரியக்குமார் யாதவ். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 219 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சஹா, கில், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் 41 ரன்களும், விஜய் சங்கர் 29 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ரஷித் கான் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அதிரடியாக விளையாடிய ரஷித் கான் 32 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார். இருந்தும் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.
27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 7வது வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி 3வது இடத்திற்கு முன்னேறியது.