நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…

0
139

 

நடிகர் தனுஷ் திரைப்படத்தில் இணைந்த ராஷ்மிகா… அதிகாரப்பூர்வ அறிப்பை வெளியிட்ட படக்குழு…

 

நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டி51 திரைப்படம் பற்றி புதிய அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

 

கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் அவர்கள் இரண்டாவது முறையாக திரைப்படம் இயக்கி நடித்தும் வருகிறார். இந்த திரைப்படம் நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது திரைப்படமாக இருப்பதால் டி50 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது டி50 திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வருகிறார்.

 

மேலும் நடிகர் தனுஷ் அவர்கள் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை நடிகர் தனுஷ் அவர்களே தயாரிக்கவுள்ளார்.

 

இந்தநிலையில் இயக்குநர் சேகர் கம்மூலா அவர்களின் இயக்கத்தில் தனது(தனுஷ்) 51வது படமான டி51 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். டி51 திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாளின் பொழுது அறிவித்தது.

 

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிக்கும் 51வது படமான டி51 படத்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் டி51 திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் டி51 திரைப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Previous article8000 ரூபாய் மதிப்பில் 8 ஜிபி ரேம் கொண்ட மொபைல்… மோட்டோ நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்தது…
Next articleகோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்…