ரேஷன் கடை ஊழியர்கள் மறியல் போராட்டம்!!இது தான் காரணமா!!

Photo of author

By Jeevitha

ரேஷன் கடை ஊழியர்கள் மறியல் போராட்டம்!!இது தான் காரணமா!!

Jeevitha

Ration shop workers picket strike!! Is this the reason!!

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி கடை ஊழியர்கள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி வரை வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். அதற்கான முக்கிய காரணம் தமிழ்நாட்டில் வங்கிகளை விடவும் ரேஷன் கடை, மக்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் ரேஷன் கடைகளுடன் வங்கி செயல்பாடுகள் இணைக்கப்படவுள்ளது என அரசு அறிவித்துள்ளது.

இப்படி ரேசன் கடை ஊழியர்கள் பல்வேறு துறைகளில் செயல்படுகிறார்கள். அப்படி பல்வேறு துறையின் கீழ் அவர்கள் வேலை செய்தாலும் அவர்கள் ஒரே துறையின் கீழ் இல்லாமல் நான்கு துறைகளின் கீழ் உள்ளார்கள். இதனால் பல பிரச்சனைகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள். இந்த நிலையில் பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக்கோரி ரேஷன் கடை ஊழியர்கள் வரும் நவம்பர் 7-ம்தேதி வரை வேலை நிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்து உள்ளார்கள்.

மேலும் பொது விநியோக திட்டத்துக்கு என தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும்  பூட்டிவிட்டு ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம் என தெரிவிக்கபட்டுள்ளது. அந்த வேலை நிறுத்த நாட்கள் அப்போது மாவட்ட தலைமையிடங்களில் “மறியல் போராட்டம்” நடத்த உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் பொது விநியோகத்திட்டத்தில் அரிசி,கோதுமை,சர்க்கரை,சிறப்பு பொது விநியோக திட்டத்தில் பருப்பு, பாமாயில் போன்ற பொருள்கள் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.