ரேஷன் கடைகளில் இனி இதுவும் சேர்த்து வழங்கப்படும்!! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!!

Photo of author

By Janani

 

ரேஷன் கடைகளில் இனி இதுவும் சேர்த்து வழங்கப்படும்!! தமிழக அரசின் புதிய நடவடிக்கை!!

ரேஷன் கடைகளில் வாங்கப்படும் பொருளுக்கு தமிழக அரசு செலவு செய்யும் விலை விபரம் அடங்கிய மானிய ரசீது வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான மக்கள் இலவசமாக கொடுக்கும் அரிசி தவிர்த்து மீதமுள்ள பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள். இதனால் ரேஷன் கடைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. இதனை தடுப்பதற்காக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் பொழுது ரேஷன் அட்டைதாரர்களின் தனிப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்படும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த முறை நடைமுறையில் இருப்பினும் ரேஷன் ஊழியர்கள் இலவச அரிசியை முறைகேடாக விற்று வருவதாக தொடர் புகார்கள் எழுந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தற்போது விரல் ரேகை பதிவு, பிரிண்டர் ரசீது ஆகியவற்றவுடன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கைரேகை பதிவின் போது சில மக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் பெரியசாமி, ரேஷன் கடைகளில் பொருள் வாங்கும் பொழுது கண் கருவிழி பதிவு செய்யும் முறையை துவக்கி வைத்துள்ளார். இதன் மூலம் பொருட்கள் வாங்கும் பொழுது நுகர்வோரின் கண் கருவிழி பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மானிய ரசீது வழங்கப்படும். அதாவது அந்த ரசீதில் ரேஷன் கார்டு எண், நுகர்வோரின் பெயர், பொருட்களின் விற்பனை அளவு மேலும் பொருள்களுக்காக தமிழக அரசு செலவு செய்யும் தொகை உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட உள்ளன.அதே நேரத்தில் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களுக்காக தமிழக அரசுக்கு ஏற்படும் செலவை பற்றி மக்கள் அறிந்து கொள்ளவும், முறைகேடுகள் நடந்தால் ரசீதில் உள்ள தொலைபேசி எண்களிலும் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.