ரவா இருந்தா போதும் வெறும் 10 நிமிஷத்துல பாயசம் செய்யலாம்.. செம டேஸ்டா இருக்கும்..!!

Photo of author

By Priya

Rava Payasam: இனிப்பு என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் பால் பாயாசம் என்றால் இரண்டு மூன்று முறை கூட வாங்கி சாப்பிடுவார்கள். பாயசம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு இனிப்புகளில் ஒன்று. சில சமயங்களில் விழாக்களின் போது நாம் உணவு சாப்பிட்டுவிட்டு ஒரு இனிப்பு சாப்பிடவில்லை என்றால் அந்த உணவு நமக்கு முழுமையான திருப்தி கொடுக்காது.

அந்த வகையில் இந்த ரவா பாயாசத்தை ஒரு முறை நீங்கள் செய்து பார்த்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும் அந்த அளவிற்கு டேஸ்டாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டிற்கு யாரேனும் விருந்தாளிகள் வந்துவிட்டார்கள் என்றால் வெறும் 10நிமிடத்தில் இந்த பாயசத்தை தயார் செய்துவிடலாம். நாம் இந்த பதிவில் ரவா பாயாசம் செய்வது எப்படி என்று (Rava Payasam Seivathu Eppadi)பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ரவை – 1 கப்
சர்க்கரை – 1கப்
பால் – 1கப்
முந்திரி திராட்சை – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து குறைவான தீயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் சிறிது நெய் விட்டு எடுத்து வைத்துள்ள ஒரு கப் ரவையை வறுத்து, அதில் பாலை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இப்பொழுது ரவை நல்லா கொதித்து வரும் பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ரவா பாயசம் தயார்.

மேலும் படிக்க: ஒரே மாதிரி உருளைக்கிழங்கு வறுவல் செய்யாமல் இந்த மசாலா உருளைக்கிழங்கு ட்ரை பண்ணுங்க..!