Ravichandran Ashwin: இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார்.
தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக விளையாடி வருகிறார். தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத ஆர்வம் ஏற்படவும், கிரிக்கெட் விளையாட்டை ஆர்வத்துடன் விளையாட காரணமாக இருந்தவர் இவர்தான். இவர் இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற்று இருக்கிறார்.
மேலும், 537 விக்கெட்களையும் 3503 ரன்களையும் குவித்து இருக்கிறார். 6 சதம் மற்றும் 14 அரை சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அஷ்வின் தனது 38 வது வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதற்கு காரணமாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. அதில், ரோஹித் சர்மாவுக்கும்,ரவிச்சந்திரன் அஷ்வினுக்கும் இடையில் சமீப காலமாக பிரச்சனை நடந்து வருகிறது. இருவரும் பேசிக் கொள்வது இல்லை. அதை உறுதி செய்யும் விதமாக சில நாட்களுக்கு முன் நடந்த ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முதலாவது ஆட்டத்தில் அஷ்வின் பங்கு பெறவில்லை.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 11 வீரர்களில் ஒருவராக களம் இறங்கினார். அதன் பின் நடந்த மூன்றாவது டெஸ்ட் அஷ்வின் விளையாட வில்லை. எனவே அந்த போட்டி இரு அணிகளும் சம புள்ளி பெற்று டிராவில் முடிந்தது. அதன், பிறகு அஷ்வின் தனது ஓய்வை அறிவித்தார் இருந்தார். இந்த போட்டியில் அஷ்வின் சரிவர பங்கு பெறவில்லை அதற்கு சர்மா-வுடன் உள்ள பிரச்சனை தான் என உறுதிப்படுத்தப்படாத தகவல் சமூக வலை தளத்தில் உலாவி வருகிறது.