ஆ.ராசாவுடன் விவாதத்திற்கு தயார் என தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஒன்றாம் தேதி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 கோடி கொள்ளையடித்த கட்சி திமுக என்று விமர்சனம் செய்தார் மெகா ஊழலை செய்துவிட்டு அரிச்சந்திரன், புத்தர் போல பேசிவரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் விரைவில் அலைக்கற்றை வழக்கில் சிக்குவார் என்று சாடி இருக்கின்றார்.
இதற்கு பதில் கூறிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா 2ஜி தொடர்பாக விவாதிக்க தயாராக இருக்கின்றேன் கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதல்வர் தயாரா அட்டர்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும் நான் தயாராக இருக்கின்றேன் என்று சவால் விடுத்து இருக்கின்றார்.
இந்நிலையில் விருதுநகரில் நேற்றையதினம் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2ஜியில் ஊழல் செய்த பணத்தை பதுக்கி வைத்து இருக்கின்றார் ஆ. ராசா அதன் காரணமாக தான் ராசாவை உடன் வைத்திருக்கின்றார் ஸ்டாலின் ராசா விவாதத்திற்கு அழைத்தால் முதல்வர் எதற்காக வரவேண்டும் நான் வருகின்றேன் திமுக தயாரா என்று கேள்வி எழுப்புகின்றார்.
முதல்வரைப் பற்றி பேசுவதற்கு ராசாவுக்கு என்ன அருகதை இருக்கின்றது ஜெயலலிதாவையோ அல்லது முதல்வரையோ பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கும் ராசாவிற்கும் எந்த ஒரு தகுதியும் கிடையாது.
அதிமுகவை சேர்ந்த நாங்கள் சொத்துப் பட்டியலை இப்போதே வெளியிடுவோம் உச்ச நீதிமன்றத்தின் முன்பே சமர்ப்பணம் செய்வோம் ஆ.ராசவால் சொத்துப் பட்டியலை வெளியிட முடியுமா மோட்டார் சைக்கிள் கூட இல்லாமல் இருந்த ராசா இப்போது எவ்வாறு வெளிநாட்டில் செல்கின்றார் காங்கிரஸிடம் தான் திமுக அடமானத்தில் இருக்கின்றது நாங்கள் பாஜகவிடம் கட்சியை அடமானம் வைக்கவில்லை பாஜக செய்யும் நல்ல திட்டங்களை ஆதரித்துக் கொண்டு இருக்கின்றோம் என்றும் தெரிவித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி