விவாதம் நடத்துவதற்கு நான் தயார் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!

Photo of author

By Sakthi

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மசோதாவிற்க்கு எதிராக பாரத் பந்த்தில் பங்குபெற்ற அனைத்து கட்சியினரும் கைது செய்யப்பட்டு திருப்பத்தூரில் இருக்கின்ற ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார்கள் அவர்களை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அதன்பின்பு கல்லல் ஒன்றியத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதில் பங்குபெற்ற விவசாயிகள் உள்ப்பட அனைத்துக்கட்சியினரும் கைது செய்யப்ட்டு மானகிரியில் இருக்கின்ற ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அறிந்துகொண்ட கார்த்திக் சிதம்பரம் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

திருமயம் சட்டசபைத் தொகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவாக பந்தத்தில் ஈடுபட்ட விவசாயிகளும் அனைத்து கட்சியினரும் கைது செய்யப்பட்டு திருமயத்தில் இருக்கின்ற மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தன அவர்களுக்கு நேரில் சென்று தன்னுடைய ஆதரவை தெரிவித்தார் கார்த்திக் சிதம்பரம்.

அதோடு அவர்களுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை கொடுத்தார் இதனைத் தொடர்ந்து அவர் பெங்களூரு செல்வதற்காக திருச்சிக்கு வந்த போது செய்தியாளர்கள் அவரை சந்தித்தார்கள்.

அந்த சமயம் வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸின் மீது தமிழக பாஜகவின் தலைவர் முருகன் சொன்ன குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பியபோது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக இருக்கும் காரணத்தால் வெறும் சம்பிரதாயத்திற்காக மட்டுமே விவாதங்களை நடத்தி விட்டு தாங்கள் நினைக்கும் சட்டங்களை நிறைவேற்றி விடுகின்றது பாஜக.

அதே போல தான் வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறார்கள் எந்தக் கட்சியின் தூண்டுதலும் இல்லாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் விவசாய சந்தைகளை விரிவுபடுத்த வழிவகை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்தது ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத பாஜக படிநிலைகளை எல்லாம் அகற்றிவிட்டு தற்போது இருக்கும் சட்டத்தை மட்டும் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இந்த விஷயம் தெரியாமல் காங்கிரஸ் கட்சியின் மீது குற்றம் சாட்டுகிறார் முருகன் முதலில் முருகன் காங்கிரஸ் கொண்டு வந்தது தொடர்பாக படிக்க வேண்டும் அதன் பிறகு அவர் விவாதம் செய்ய விருப்பப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் சார்பாக விவாதம் செய்வதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்று தெரிவித்தார்.